கன்னி - வார பலன்கள்
கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரரான கன்னி ராசி அன்பர்களே!
புதன் காலை 8.15 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால் முயற்சிகள் அதிகமானாலும், முன்னேற்றமான பலன்கள் குறைவாகவே இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகமாகும். அவசர வேலைகளால் ஓய்வு நேரம் குறைந்து அல்லல்பட நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அதிக வேலை இருந்தாலும், வருமானம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் போட்டிகளால் மனச்சஞ்சலம் ஏற்படலாம். போட்டிகளை முறியடிக்க பங்குதாரர்களோடு ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி தென்பட்டாலும் சிறுசிறு பிரச்சினைகளும் வரத்தான் செய்யும். கலைஞர்கள், பணிகளில் உற்சாகம் காட்டினாலும், வருமானம் எதிர்பார்க்கும் அளவு இருக்காது. பங்குச்சந்தையில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பது கடினம்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றுங்கள்.