கன்னி - வார பலன்கள்
தூய்மையான எண்ணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
உங்கள் முயற்சிகளில் சிறு சிறு தடைகள் இருந்தாலும், பல காரியங்களில் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். ஆவலுடன் எதிர்பார்த்த செயல் ஒன்று வெற்றிகரமாக அமையும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் செயல்களில் குறைகளை காண்பர் என்பதால், பணிகளில் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்க்கும் காரியங்கள் தள்ளிப் போகலாம்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். ஓய்வின்றி செயல்படுவதால், உடலில் களைப்பு உண்டாகக்கூடும். பண வரவுகள் தேவைக்குத் தக்கபடி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் எதிர்பார்க்கும் அளவு இருக்கும். புதிய நண்பர் ஒருவரால் நவீன தொழிலில் ஈடுபடும் எண்ணம் உருவாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய சிக்கல்கள் இருக்காது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கவனம் செலுத்துவர்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை விநாயகருக்கு சிதறு காய் உடைத்து வழிபாடு செய்து வாருங்கள்.