கன்னி - வார பலன்கள்
நேர்மையான செயல்களில் ஈடுபடும் கன்னி ராசி அன்பர்களே!
கொடுக்கல் - வாங்கலில் அவசர முடிவு எடுக்காமல் இருப்பது நல்லது. புதிய தொழில் செய்யும் எண்ணம் சிலருக்கு உண்டாகலாம். வயதானவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பயணங்களால் ஓரளவு ஆதாயம் உண்டு. சிலர் அடமானம் வைத்த நகையை மீட்க போராடுவர். நிலம், பூமி சம்பந்தமான விஷயம் ஒரு தீர்வுக்கு வரும். தம்பதிகளுக்குள் சிறிது மனக்கசப்பு உண்டாகலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெற்றி வாகை சூடும் தருணம் இது. அதே நேரம் உங்களது வலது கண்ணில் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. நெருப்பு மற்றும் சமையல் தொழில் செய்பவருக்கு ஏற்றம் வரலாம். நாள்பட்ட வியாதிகள் நிவர்த்தியாகும். பகைவர்களை உங்கள் திறமையால் வெல்வீர்கள். செல்வாக்கும், சொல்வாக்கும் பெருகும். தாய்வழி உறவினர்கள் ஆதரவு தருவார்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபாடு செய்து வாருங்கள்.