கன்னி - வார பலன்கள்


கன்னி - வார பலன்கள்
x
தினத்தந்தி 9 Jun 2023 1:23 AM IST (Updated: 9 Jun 2023 1:24 AM IST)
t-max-icont-min-icon

எச்சரிக்கையாக செயல்படும் கன்னி ராசி அன்பர்களே!

செவ்வாய் மாலை 4.20 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பழைய பிரச்சினை ஒன்று தலைதூக்கலாம். இருந்தாலும், உங்கள் முயற்சியால் வெற்றியும், அதனால் பொருளாதார மேன்மையும் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியை, உயர் அதிகாரிகள் பாராட்டும் சந்தர்ப்பம் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் இடையூறு இன்றி நடைபெறும். பணிகளில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. வீண் பேச்சுக்களை தவிர்க்கவும்.

சொந்தத் தொழிலில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். வரவேண்டிய பணம் தேடி வருவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் காணப்படும். மூலப்பொருட்களை அதிகரிக்க முற்படுவீர்கள். குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும். கலைஞர்கள் புதிய திருப்பத்தைச் சந்திப்பார்கள். பங்குச்சந்தையில் லாபம் சுமாராக இருக்கும்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்யுங்கள்.


Next Story