கன்னி - வார பலன்கள்
முன் எச்சரிக்கையுடன் காரியங்களை செய்யும் கன்னி ராசி அன்பர்களே!
உறவினர்கள் வழியில் மனக்கசப்பு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகலாம். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். கடன் பிரச்சினை தொல்லையளித்தாலும் பாதிப்பு ஏற்படாது. தந்தை வழி உறவுகளால் பலன்கள் கிடைக்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமாக செயல்பட வேண்டும்.
பண சம்பந்தமான தொழிலில் உள்ளவர்கள் கவனமாக நடந்து கொள்வது அவசியம். அலுவலகப் பதிவேடுகளை சரிபார்க்க வேண்டிவரும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் இருக்காது. வாடிக்கையாளர்களின் தேவையை முடித்துக் கொடுக்க அலைச்சலை சந்திப்பீர்கள். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளின் இடையூறு இருக்கலாம். குடும்பத்தில் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் காரணமாக பிரச்சினை வரலாம்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்து வாருங்கள்.