வார ராசிபலன் 24.11.2024 முதல் 30.11.2024 வரை


Weekly Rasi Palan - 24.11.2024 to 30.11.2024
x
தினத்தந்தி 24 Nov 2024 3:30 PM IST (Updated: 1 Dec 2024 8:17 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

இந்த வார ராசிபலன்

மேஷம்

தளராத முயற்சி கொண்ட மேஷம் ராசியினர் இந்தவாரம் பல தடைகளை கடந்து வெற்றி பெறுவார்கள். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ற வரவும் உண்டு. பலதடை தாமதங்களை சந்தித்து வந்த தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் முன்னேற்றம் அடைவர். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு பெற்று உற்சாகம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு உற்சாகமாக பயணம் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். உடல்நலனை பொறுத்தவரை காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் குணமாகும். ஆதரவற்ற அனாதை பெண்களுக்கு பொருள்உதவி, அன்னதானம் செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

ரிஷபம்

எந்த நிலையிலும் நிதானம் தவறாத ரிஷபம் ராசியினருக்கு இது உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்தவாரம். செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ற வரவும் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் தடை தாமதங்களை சந்தித்தாலும் அவற்றை வெற்றிகரமாக கடந்து செல்வார்கள். அதிகாரம் மிக்க பதவிகளில் உள்ள உத்தியோகஸ்தர்கள் சங்கடங்களை சந்தித்து வெற்றி கொள்வார்கள். மாணவர்களுக்கு வாரவிடுமுறை உற்சாகமாக இருக்கும். அவர்கள் மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை எச்சரிக்கையாக தவிர்க்க வேண்டும். உடல்நிலையை பொறுத்தவரை காய்ச்சல், உடல் அசதி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைமூலம் குணமாகும். உங்களிடம் உதவி கேட்டவருக்கு இயன்றவரை செய்வது மற்றும் புற்றுக்கோவில் வழிபாடு ஆகியவை மூலம் நன்மை ஏற்படும்.

மிதுனம்

எந்த விஷயத்தையும் துல்லியமாக திட்டமிட்டு செயல்படுத்தும் மிதுன ராசியினர் நல்ல மாற்றங்களை சந்திப்பார்கள். குடும்ப நிலையை பொறுத்தவரை சிக்கல்களை சுலபமாக சரி செய்துவிடுவீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் தங்களுடைய தொழில் விரிவாக்க முயற்சிகளை சிறிது காலம் ஒத்திவைக்கவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணிகளில் வழக்கத்தை விட கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பழைய மனஸ்தாபங்களை மனதில் கொள்ளாமல் நண்பர்களை அனுசரித்து செல்லவேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது சுகாதாரமான தண்ணீர், பானங்களை பருகுவது அவசியம். மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவது பல நன்மைகளை தரும்.

கடகம்

பணத்தை விட குணத்திற்கு முக்கியத்துவம் தரும் கடகம் ராசியினர் இந்தவாரம் பல இடங்களுக்கு பிரயாணம் செய்வதன் மூலம் புதிய நபர்கள் அறிமுகம் கிடைக்கும். குடும்ப நிலையை பொறுத்தவரை உறவுகளை அனுசரித்து செல்வதோடு, செலவுகளையும் கட்டுக்குள் வைக்க வேண்டும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் திட்டமிட்ட லாபத்தை பெற இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும். உத்தியோகதர்கள் மேலதிகாரிகள் ஆதரவால் பதவி உயர்வு பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாடங்களில் வழக்கத்தை விட கூடுதல் கவனம்செலுத்தி படிக்க வேண்டும். உடல் நலனை பொறுத்தவரை மன உளைச்சல், உடல் அசதி ஏற்பட்டு விலகும். கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள், உடன் பிறந்த மூத்தவர்களுக்கு பரிசுகள் வழங்குவதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.

சிம்மம்

நேர்மையை தாரக மந்திரமாகக்கொண்ட சிம்மம் ராசியினர் இந்த வாரம் சொந்த பந்தங்களிடையே மதிப்பு மரியாதை பெறுவார்கள். பொருளாதார நிலையை பொறுத்தவரை செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் எதிர்பாராத செலவுகளை சந்தித்து அதை சுமுகமாக சரி செய்வார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் மற்றவர்களை நம்பி இருக்காமல் தாங்களே களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்தி கற்க வேண்டிய காலகட்டம் இது. உடல் நலனை பொறுத்தவரை நேரம் தவறி உண்பதால் வயிற்று கோளாறுகள் ஏற்பட்டு விலகும். முதியோர் இல்லங்களுக்கு எரிபொருள், குடிநீர்வாங்கி கொடுப்பதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.

கன்னி

காரிய வெற்றியை மனதில்கொண்டு அயராது உழைக்கும் கன்னி ராசியினருக்கு இந்தவாரம் புதிய தொடர்புகளால் முன்னேற்றம் ஏற்படும். குடும்பநிலையை பொறுத்தவரை அனைவரையும் அனுசரித்துச்சென்று சிக்கல்களை சமாளிப்பீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் பல தடை தாமதங்களை சந்தித்தாலும் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பொறுமையாக இருந்ததற்கான பலனை அடைவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிட்டி மூலம் பல சாதனைகளை புரிவார்கள். உடல்நலனை பொறுத்தவரை ஜலதோஷம் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்பட்டு விலகும். அருகிலுள்ள கோவில் குளங்களை சுத்தமாக பராமரிக்க உதவி செய்வது, கோவில் வளாகத்தை சுத்தம் செய்வது ஆகியவற்றின் மூலம் நன்மைகள் ஏற்படும்.

துலாம்

எந்த விஷயத்திலும் நேர்மையாக நடந்துகொள்ளும் துலாம் ராசியினர் இந்தவாரம் உற்சாகமாக செயல்பட்டு தங்கள் திட்டங்களை நிறைவேற்றுவார்கள். இல்லத்தரசிகள் பழையகடன்களை திருப்பி செலுத்துவதில் முனைப்பாக இருப்பார்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் பல நல்லமாற்றங்களை எதிர்கொண்டு முன்னேற்றப்பாதையில் நடைபோடுவார்கள். உத்தியோகஸ்தர்கள் இதுவரை சந்தித்த தடை தாமதங்கள் விலகி பதவி உயர்வு பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களுடைய பொறுப்புகளை உணரும் காலகட்டம் இது. உடல்நலனை பொறுத்தவரை ஜலதோஷம், இருமல் ஏற்பட்டுதக்க மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அகலும். துப்புரவு தொழிலாளிகளுக்கு உணவு, இதர பொருள்தானம் செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

விருச்சிகம்

தீர்க்கமான முடிவு எடுத்து வெற்றிக் கனியை பறிக்கும் பழக்கம் உள்ள விருச்சிகம் ராசியினருக்கு இந்தவாரம் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த விஷயங்கள் நல்லவிதமாக நடக்கும். குடும்ப நிலையை பொறுத்தவரை எதிர்ப்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் எப்படியோ சமாளித்து விடுவீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் நீண்ட நாட்களாக திட்டமிட்ட தொழில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு நிர்வாகத்தின் பாராட்டு பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களுடைய எதிர்கால லட்சியத்தை உருவாக்கிக்கொள்வதற்கான வழிகாட்டுதல் கிடைக்க பெறுவார்கள். பல்வேறு குழப்பங்களால் மன அழுத்தம் மற்றும் தலைவலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் அகலும். ஆதரவற்ற அனாதை பெண் மணிகளுக்கு சேலைதானம் செய்வதால் நன்மைகள் ஏற்படும்.

தனுசு

எந்த வேலையை எப்படி செய்ய வேண்டும் என்ற நுணுக்கம் அறிந்த தனுசு ராசிகளுக்கு இந்தவாரம் நன்மைகள் வீட்டுக்கதவை தேடிவந்து தட்டும். குடும்ப பொருளாதாரநிலையைபொறுத்தவரை எதிர்பார்த்தவரவுகள் தாமதம் ஆனாலும் எப்படியாவது வந்து சேர்ந்துவிடும். தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து உற்சாகமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத பலநல்ல மாற்றங்களை பணியிடங்களில் சந்திப்பார்கள். பள்ளி, கல்லூரிமாணவர்கள் எதிர்கால உத்தியோகம் குறித்த வழிகாட்டுதல்களைப் பெறுவார்கள். உடல்நலனை பொறுத்தவரை வெளியிடங்களில் உண்ணும் உணவு, பருகும் நீர் காரணமாக வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு அகலும். அனாதையாக இறந்தவர்களுடைய உடலை அடக்கம் செய்யும் அறக்கட்டளைகளுக்கு உதவி செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

மகரம்

பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு விஷயத்தையும் வடிவமைத்துக்கொள்ளும் திறன் பெற்ற மகரம் ராசியினர் இந்தவாரம் நல்லபுதிய மாற்றங்களை சந்திப்பார்கள்.குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை கடந்த காலத்தில் உள்ள சிக்கல்கள் படிப்படியாக விலகும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய முதலீடு செய்து தொழில்விரிவாக்க பணிகளை மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் தொடர்புமூலம் நன்மைகளை பெறுவார்கள். விளையாட்டுகளில் திறமைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பார்கள். காலம்தவறி உண்பதாலும், பாஸ்ட்புட் வகைகளை உண்பதாலும் வயிற்று கோளாறுகள் ஏற்பட்டு அகலும். கழிவுநீரகற்றும் துப்புரவு தொழிலாளிகளுக்கு பொருள் உதவி மற்றும் ஆடைதானம் செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

கும்பம்

துன்பங்களை தாங்கி நின்று எதிர்த்து போராடும் மன உறுதிகொண்ட கும்பம் ராசியினருக்கு இந்தவாரம்சமூகம் மற்றும் சொந்த பந்தங்கள் இடையே மதிப்பு மரியாதைகூடும். குடும்ப பொருளாதாரநிலையை பொறுத்தவரை புதியகடன் வாங்காமல் சமாளித்துவிடுவீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் நீண்டநாட்களாக மனதில் வைத்திருந்த திட்டங்களை நிறைவேற்றுவார்கள். உத்தியோகஸ்தர்கள் திறமைக்கேற்ற பாராட்டுகளை நிர்வாகத்தினர் மூலம் பெறுவார்கள். பள்ளி,கல்லூரி மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும். உடல் நலனை பொறுத்தவரை காய்ச்சல் ஏற்பட்டால் தகுந்த மருத்துவ சிகிச்சை, ரத்த பரிசோதனைசெய்து கொள்ளவேண்டும். அருகிலுள்ள பிள்ளையார் அல்லது ஆஞ்சநேயர் கோவிலுக்கு வஸ்திர சமர்ப்பணம் செய்வது நன்மைகளை ஏற்படுத்தும்.

மீனம்

மனக்குழப்பங்கள் இருந்தாலும் எந்த விஷயத்தையும் சரியாகசெய்யும் திறன்பெற்ற மீனம் ராசியினர் இந்தவாரம் சுறு சுறுப்பாக செயல்பட்டு அவர்களே ஆச்சரியப்படும் விதத்தில் பல விஷயங்களை செய்து முடிப்பார்கள். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை பழைய கடன்களை திருப்பி செலுத்தும் காலகட்டம் இது. தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் எதிர்பாராத தடைதாமதங்களை சந்தித்து அதை வெற்றிகரமாக கடந்து செல்வர். உத்தியோகஸ்தர்கள் அலுவலகரீதியான புதிய தொழில்நுட்பங்களைகற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பள்ளி, கல்லூரிமாணவர்கள் எதிர்காலம் முன்னேற்றத்திற்கான புதிய தொழில்நுட்பங்களை கற்கும் சூழல் உருவாகும். உடல்நலனை பொறுத்தவரை காய்ச்சல், கை-கால்வலி ஏற்பட்டுவிலகும். வயதான பெண்களுக்கு செருப்புதானம் செய்வது, புற்றுகோவிலில் பாலபிஷேகம் செய்வது ஆகியவை மூலம் நன்மைகள் ஏற்படும்.





Next Story