அபாச்சேவின் புதிய அவதாரம்


அபாச்சேவின் புதிய அவதாரம்
x

இந்திய இளைஞர்களின் கனவு மோட்டார் சைக்கிளாகத் திகழும் அபாச்சே தற்போது புதிய மாடலாக ஆர்.டி.ஆர் 310 சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத் தயாரிப்புகளில் பிரீமியம் மாடல் மோட்டார் சைக்கிளாக அபாச்சே திகழ்கிறது. அபாச்சே மாடல் விற்பனைக்கு வந்து 18 ஆண்டுகளாகிறது. இந்திய இளைஞர்களின் கனவு மோட்டார் சைக்கிளாகத் திகழும் அபாச்சே தற்போது புதிய மாடலாக ஆர்.டி.ஆர் 310 சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரேசிங் அனுபவத்தைப் பெற விரும்பும் இளைஞர்களின் தேர்வாக பிரத்யேக என்ஜினு டனும், அது சூடேறுவதைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்துடனும் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் ரேடியேட்டர் 23 வரிசைகள் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதால், என்ஜினின் வெப்பம் பெருமளவு குறைக்கப்பட்டு இதன் செயல்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளில் முதன் முறையாக குரூயிஸ் கண்ட்ரோல் வசதி, ஐந்து விதமான ஓட்டும் நிலைகள், 6 கியர்கள் உள்ளன. 312 சி.சி. திறனை வெளிப்படுத்தும் டி.ஓ.ஹெச்.சி. என்ஜின் உள்ளதால் 35.6 பி.எஸ். திறனை, 9,700 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 28.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,650 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். இதை ஸ்டார்ட் செய்த 2.8 விநாடி களில் 60 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடும்.

ஸ்மார்ட்போன் இணைப்புடன், குரல் வழிக்கட்டுப்பாட்டில் செயல்படுவது, மோதல் தவிர்ப்பு எச்சரிக்கை அளிப்பது போன்ற சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.


Next Story