பி.எம்.டபிள்யூ. எம் 1000 ஆர்.ஆர். அறிமுகம்


பி.எம்.டபிள்யூ. எம் 1000 ஆர்.ஆர். அறிமுகம்
x

பிரீமியம் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிதாக எம் 1000 ஆர்.ஆர். மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.49 லட்சம்.

இந்த மோட்டார் சைக்கிள் 999 சி.சி. திறனை வெளிப்படுத்தும் நான்கு ஸ்டிரோக் என்ஜினைக் கொண்டுள்ளது. என்ஜின் வெப்பத்தைக் குளிர்விக்க கூலன்ட் வசதியும் இதில் உள்ளது. 14,500 ஆர்.பி.எம். சுழற்சியில், 212 ஹெச்.பி. திறனையும், 11 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் 113 நியூட்டன் டார்க் மீட்டர் இழு விசையையும் வெளிப்படுத்தும். ஏற்கனவே அறிமுகமான எஸ் 1000 ஆர்.ஆர். மாடலை விட இதன் வடிவமைப்பு வித்தியாசமான தாகும். இதில் 7 விதமான ஓட்டும் நிலைகள் உள்ளன. 6.5 அங்குல டி.எப்.டி. திரை, ஏ.பி.எஸ். மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் உள்ளது.

எம் காம்படீஷன் பேக்கேஜ் எனப்படும் அதிநவீன வசதி களைப்பெற கூடுதலாக சுமார் ரூ.6 லட்சம் செலுத்த வேண்டும்.


Next Story