பி.எம்.டபிள்யூ. ஆர் 18 டிரான்ஸ்கான்டினன்டல்


பி.எம்.டபிள்யூ. ஆர் 18 டிரான்ஸ்கான்டினன்டல்
x

சொகுசு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிதாக பி.எம்.டபிள்யூ. ஆர் 18 டிரான்ஸ்கான்டினன்டல் என்ற பெயரி லான உயர் ரக நீண்ட தூர பயணத்துக்கான மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

இது முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாகும். இங்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யப்போவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பி.எம்.டபிள்யூ. மோட்டராட் விற்பனையகங் களில் இது கிடைக்கும்.

அழகிய வடிவமைப்பு, பாக்ஸர் என்ஜின், சொகுசான பயணத்திற்கான வடிவமைப்பு ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். நீண்ட தூரம் பயணித்தாலும் களைப்பு தெரியாத வகையில் இதன் ஷாக் அப்சார்பர் மற்றும் வடிவமைப்பு உள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.31,50,000.

கருப்பு, நீலம், வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் இது கிடைக்கும். மிக நீளமான ஹாண்டில்பார், காற்றை மறைக்கும் விண்ட்ஷீல்டு சொகுசான பயணத்தை உறுதி செய்கிறது. தொட்டில் வடிவிலான பிரேம், கண்ணீர் சொட்டு போன்ற வடிவிலான பெட்ரோல் டேங்க் ஆகியன 1936-ம் வருடத்தில் வெளிவந்த மாடலின் வடிவமைப்பை பிரதிபலிப்பதாக உள்ளது. முன்புறம் 10.25 அங்குல டி.எப்.டி. திரை உள்ளது. பெர்லினில் வடிவமைக்கப்பட்ட எல்.இ.டி. முகப்பு விளக்கு, பி.எம்.டபிள்யூ.வின் பாரம்பரியத்தைக் காக்கும் வகையிலான பகலில் ஒளிரும் விளக்கு வடிவமைப்பு உள்ளது. இது 1,802 சி.சி. திறனுடைய என்ஜினைக் கொண்டது. 91 ஹெச்.பி. திறனை 4,750 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப் படுத்தும். 158 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 3 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். இது 6 கியர்கள் மற்றும் 3 விதமான ஓட்டும் நிலைகளை (மழை, உருளும் பாதை, பாறை) கொண்டது. இதில் எலெக்ட்ரானிக் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி உள்ளது.


Next Story