பெராரி 296 ஜி.டி.எஸ்


பெராரி 296 ஜி.டி.எஸ்
x

பெராரி நிறுவனம் 296 ஜி.டி.எஸ். மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை சுமார் ரூ.6.24 கோடி. இது ஸ்டார்ட் செய்து 2.9 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடும் திறன் கொண்டது. இதில் 3 லிட்டர் டுவின் டர்போ வி 6 என்ஜின், பின்புறம் 166 பி.ஹெச்.பி. திறனை வெளிப் படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 330 கி.மீ. ஆகும்.

இதன் மேற்கூரை கழற்றி மாட்டும் வகையிலானது. வாகனம் 45 கி.மீ. வேகத்தில் செல்லும்போது 14 விநாடிகளில் இதன் மேற்கூரை முழுவதுமாக திறந்து அல்லது மூடிக்கொள்ளும். வாகனத்தின் மொத்த எடை 1,540 கி.கி. ஆகும்.


Next Story