ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 4 வி


ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 4 வி
x

இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான எக்ஸ் பல்ஸ் 200 4 வி மாடலில் தற்போது ஏ.பி.எஸ். மற்றும் புதிய முகப்பு விளக்குகளைக் கொண்ட மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று விதமான ஓட்டும் நிலைகள் உள்ளன. புரொஜெக்டர் எல்.இ.டி. முகப்பு விளக்கு இதற்கு அழகிய தோற்றத்தை அளிக்கிறது.

இதில் பேஸ் மற்றும் புரோ என்று இரண்டு மாடல்கள் வந்துள்ளன. பேஸ் மாடலின் விலை சுமார் ரூ.1,43,516. புரோ மாடலின் விலை சுமார் ரூ.1,50,891. நீண்ட தூரம் பயணித்தாலும் களைப்பு ஏற்படாத வகையில் இதில் 60 மி.மீ. உயரம் அதிகமுள்ள விண்ட் ஷீல்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. சாகசப் பயணங்களை விரும்பும் இளைஞர்களை மனதில் கொண்டு இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 வால்வு கொண்ட ஏர் கூல்டு வால்வுடைய என்ஜினைக் கொண்டது. இது 199.6 சி.சி. திறனையும், 19.1 பி.எஸ். திறனை 8,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தக்கூடியது.

இது 17.35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். முன்புறம் 37 மி.மீ. டெலஸ்கோப்பிக் போர்க் மற்றும் பின்புறம் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான மோனோஷாக் அப்சார்பரைக் கொண்டுள்ளது.


Next Story