மேம்படுத்தப்பட்ட ஹோண்டா எஸ்.பி 125


மேம்படுத்தப்பட்ட ஹோண்டா எஸ்.பி 125
x

இரு சக்கர வாகனத் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமான ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்ட எஸ்.பி 125. மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

125 சி.சி. திறன் கொண்ட இந்த மாடல் பாரத் 6 புகைவிதி சோதனையைப் பூர்த்தி செய்யும் வகையிலானது. ஓ.பி.டி 2 எனப்படும் தானாக பழுதுகளைக் கண்டறியும் தொழில்நுட்ப வசதி இதில் இடம்பெற்றுள்ளது.

இதில் உள்ள ஏ.சி.ஜி. மோட்டார் விரைவாக அதிர்வின்றி, நிசப்தமாக என்ஜின் ஸ்டார்ட் ஆவதை உறுதி செய்கிறது. முழு அளவிலான டிஜிட்டல் மீட்டரைக் கொண்டது. இது அன்றாட வாழ்விற்குத் தேவையான அனைத்துத் தகவலையும் அளித்து உதவும். மிக அழகிய வடிவமைப்பைக் கொண்டதாக பெட்ரோல் டேங்க் உள்ளது. இதில் அழகிய கிராபிக் டிசைனும் இடம்பெற்றுள்ளது. முகப்பு விளக்கு அழகிய தோற்றத்தை அளிக்கிறது. என்ஜினை ஆன்-ஆப் செய்வதற்கு சுவிட்ச், 5 கியர்கள், டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக்குகளை உடையதாக வந்துள்ளது. இதில் பியூயல் இன்ஜெக்ஷன் நுட்பம் உள்ளதால் எரிபொருள் சிக்கனமானது. அத்துடன் குறைவான புகை வெளியிடக் கூடியது. இதன் டிஜிட்டல் மீட்டரில், வாகனம் எந்த கியரில் செல்கிறது என்பதை துல்லியமாக உணர்த்தும்.

இதில் அலாய் சக்கரம் உள்ளது. இதன் பின்புறம் உள்ள ஷாக் அப்சார்பரை 5 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்ய இயலும். இதில் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) உள்ளது. கருப்பு, கிரே, சிவப்பு, நீலம் உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் கிடைக்கும்.

டிரம் பிரேக் உள்ள மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.85,131. டிஸ்க் பிரேக் உள்ள மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.89,131.


Next Story