ஐ-பால்கன் 4-கே கூகுள் டி.வி. அறிமுகம்


ஐ-பால்கன் 4-கே கூகுள் டி.வி. அறிமுகம்
x

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் டி.சி.எல். நிறுவனத்தின் அங்கமான ஐ-பால்கன் நிறுவனம் புதிதாக 4-கே ரெசல்யூஷன் கொண்ட டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இது 43 அங்குலம், 50 அங்குலம், 55 அங்குலம் மற்றும் 65 அங்குல அளவுகளில் கிடைக்கும். கியூலெட் திரையை கொண்டிருப்பதால் காட்சிகள் துல்லியமாக இருக்கும். இனிய இசையை வழங்க இதில் டால்பி அட்மோஸ் சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 30 வாட் திறன் கொண்ட ஒருங்கிணைந்த ஸ்பீக்கர் பாக்ஸ்கள் இதில் உள்ளன. வை-பை மற்றும் புளூடூத் இணைப்பு வசதியையும் கொண்டுள்ளது.

43 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.26,999.

50 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.32,999.

55 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.37,999.

65 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.62,999.


Next Story