கோமெட் கேமர் எடிஷன் அறிமுகம்

கோமெட் கேமர் எடிஷன் அறிமுகம்
Published on

கோமெட் கேமர் எடிஷன் எம்.ஜி. மோட்டார் நிறுவனம்தனது கோமெட் மாடலில் கேமர் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் விலை சுமார் ரூ.65 ஆயிரம் அதிகமாகும். வீடியோகேம் விளையாட்டுகளை உருவாக்கும் நிறுவனத்துடன் இணைந்து காரின் வண்ணம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

பர்ப்பிள் வண்ணம் சக்கரங்கள், கதவுகளில் மற்றும் விளக்கிலும் பக்கவாட்டுப் பகுதியிலும் ஒளிரும் வகையிலும் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் நீல நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அழகாகக் காட்சி தருகிறது. உள்புறத்திலும் நீலம், பர்ப்பிள் வண்ணங்கள் ஆங்காங்கு அழகிய தோற்றத்தை அளிக்கிறது. இந்த கார் 17.3 கிலோவாட் அவர் பேட்டரியைக் கொண்டுள்ளது.

இது 42 ஹெச்.பி. திறனையும், 110 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 230 கி.மீ. தூரம் ஓடும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.10.60 லட்சம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com