ஹீரோ பேஷன் பிளஸ் அறிமுகம்


ஹீரோ பேஷன் பிளஸ் அறிமுகம்
x

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது பேஷன் மாடல் மோட்டார் சைக்கிளில் மேம்பட்ட அம்சங்களைப் புகுத்தியுள்ளது .

இரு சக்கர வாகனத் தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது பேஷன் மாடல் மோட்டார் சைக்கிளில் மேம்பட்ட அம்சங்களைப் புகுத்தி பேஷன் பிளஸ் என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.76,301. பேஷன் மோட்டார் சைக்கிள் பிரிவில் பேஷன் மாடல் மிகவும் ஸ்டைலான தோற்றம் கொண்டது. சொகுசான பயணத்தை அளிக்கும் என்ற நம்பகத்தன்மையை வாடிக்கையாளர்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது. இந்த காரணங்களுக்காகவே இதில் மேம்படுத்தப் பட்ட மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த முயற்சியின் விளைவாக தற்போது பேஷன் பிளஸ் அறிமுகமாகி உள்ளது.

மோட்டார் சைக்கிள் விற்பனைச் சந்தையில் தங்கள் நிறுவன பங்களிப்பை மேலும் அதிகரிக்க பேஷன் பிளஸ் அறிமுகம் உதவும் என இந்நிறுவனம் உறுதி யாக நம்புகிறது. 100 சி.சி. பிரிவில் மிகுந்த எரிபொருள் சிக்கனமான வாகனம் இதுவாகும். 5.9 கிலோவாட் திறனை, 8 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப் படுத்தும். 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும்.

இதில் நிறுவனத்தின் பிரத்யேக நுட்பமான ஐ 3. எஸ். தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. சிவப்பு, கருப்பு, நீலம், கிரே ஆகிய நிறங்களில் கிடைக்கும்.


Next Story