ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷன் அறிமுகம்


ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷன் அறிமுகம்
x

ஹூண்டாய் தயாரிப்புகளில் வென்யூ மாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்ற காராகும். இதில் தற்போது நைட் எடிஷனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.10 லட்சம். இதில் பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.13.48 லட்சம். இந்த காரில் 1 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் என்ஜினைக் கொண்ட 7 வேரியன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் இரட்டை வண்ணம் கொண்ட வேரியன்ட்கள் வந்துள்ளன.

நைட் எடிஷன் கருப்பு, வெள்ளை, கிரே மற்றும் சிவப்பு என நான்கு வண்ணங்களிலும், இரட்டை வண்ண மாடல்களில் கருப்பு, சிவப்பு கலந்த கலவையிலும் கிடைக்கும்.

83 ஹெச்.பி. திறனையும், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை யும் வெளிப்படுத்தக் கூடியது. இது 1.2 லிட்டர் என்ஜினைக் கொண்டிருப்பதோடு 5 மேனுவல் கியர்களைக் கொண்டதாக வந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்ட எஸ்.எக்ஸ் (ஓ). மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்களைக் கொண்டது.


Next Story