டொயோட்டா ருமியோன் அறிமுகம்


டொயோட்டா ருமியோன் அறிமுகம்
x

டொயோட்டா நிறுவனம் புதிதாக ருமியோன் என்ற பெயரில் குடும்பத்தினருக்கு ஏற்ற பன்முக செயல்பாடு கொண்ட எம்.பி.வி. காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் விரும்பினால் சி.என்.ஜி. மாடல் காரையும் தேர்வு செய்து கொள்ளலாம். சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20.51 கி.மீ. தூரம், ஒரு கிலோ சி.என்.ஜி.க்கு 26.11 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 7 பேர் சவுகரிய மாக பயணிக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.10.29 லட்சம் முதல் சுமார் ரூ.13.68 லட்சம்.

இதில் மொத்தம் 6 வேரியன்டுகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. இவற்றில் மேனுவல் மாடல் 5 கியர்களையும், ஆட்டோமேட்டிக் மாடல் 6 கியர்களையும் கொண்டது. டேஷ்போர்டில் 17.78 செ.மீ. அளவிலான ஸ்மார்ட்பிளே தொடுதிரை உள்ளது. இனிய இசையை வழங்க அர்கமிஸ் ஆடியோ சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இணைப்பு வசதி, இன்போடெயின் மென்ட் சிஸ்டம் புளூடூத் இணைப்பு, வயர்லெஸ் சார்ஜிங், வாகனத்தை எளிதாக இயக்க டொயோட்டா ஐ-கனெக்ட் செயலி இணைப்பு, ரிமோட் மூலம் காரின் குளிர் நிலையை கண்ட்ரோல் செய்யும் வசதி, காரை பூட்டுவது மற்றும் திறப்பது, அதிக ஒளியை வீசும் முகப்பு விளக்கு, குரல் வழிக் கட்டுப்பாட்டு வசதி, ஏ.பி.டி., இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், என்ஜின் இம்மொபிலைஸர், இ.எஸ்.பி., ஹில் ஹோல்ட் அசிஸ்ட், அதிக வேகத்தில் செல்லும்போது அது குறித்த எச்சரிக்கை உணர்த்தி, விபத்து எச்சரிக்கை அறிவிப்பு, பார்க்கிங் பகுதியில் காரை எளிதில் கண்டறியும் வசதி, வாகன செயல்பாடு தவறாகும் பட்சத்தில் அதுகுறித்த எச்சரிக்கை உணர்த்தி உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

ஸ்டீயரிங் சக்கரத்திலேயே ஆடியோ செயல்பாட்டுக்கான சுவிட்சுகள் உள்ளது இதன் சிறப்பம்சமாகும். முன்புறம் இரண்டு ஏர் பேக்குகளும், முன்புற பக்கவாட்டில் இரண்டு ஏர் பேக்குகளும், குழந்தைகள் பயணிப்பதற்கேற்ற ஐ-சோபிக்ஸ் இருக்கையும் இதில் உள்ளன.


Next Story