டிரையம்ப் ஸ்பீட் 400 அறிமுகம்


டிரையம்ப் ஸ்பீட் 400 அறிமுகம்
x

உயர் ரக மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த டிரையம்ப் நிறுவனம் பஜாஜ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து தனது தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக ஸ்பீட் 400 மாடல் மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 398 சி.சி. திறன் கொண்ட டி.ஆர். சீரிஸ் ஒற்றை சிலிண்டர் என்ஜின் உள்ளது. என்ஜினைக் குளிர்விக்க லிக்விட் கூலன்ட் பகுதி (ரேடியேட்டர்) இதில் அமைந்துள்ளது. டிரையம்ப் வாகனத்தின் தனித்துவ அடையாளங் களான சிலிண்டர் தலைப் பகுதி, சைலன் சரின் வடிவமைப்பு உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்டுள்ளன. பவுடர் மேல்பூச்சு கொண்ட என்ஜின் மேல்பாகம், உறுதியான அனோடைஸ்டு போர்க், உயர்தர பெயிண்ட், பளிச்சிடும் லோகோ ஆகியவை இதன் அழகை மேலும் மெருகேற்றுகிறது. நான்கு வால்வுகளைக் கொண்ட டி.ஓ.ஹெச்.சி. சிலிண்டர், கிராங்க் ஷாப்ட் ஆகியன வாகனத்திற்கு திறனையும் அளிக்கிறது.

இந்த மோட்டார் சைக்கிள் 8 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் 40 ஹெச்.பி. திறனையும், 6,500 ஆர்.பி.எம். சுழற்சியில் 37.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இது 6 கியர்களை கொண்டது. யூரோ 5 புகை விதிகளின்படி இதன் என்ஜின் புகை வெளியிடும் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். எலெக்ட்ரானிக் பியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் ஆக்சிலரேட்டர் கண்ட்ரோல் வசதி இதில் உள்ளது. ஸ்பீட் மோட்டார் சைக்கிளின் எடை 170 கி.கி.

ஸ்பீட் மாடலின் விற்பனை யக விலை சுமார் ரூ.3 லட்சம்.


Next Story