ஜெப் ஜூக் பார் 1000 அறிமுகம்


ஜெப் ஜூக் பார் 1000 அறிமுகம்
x

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக `ஜூக் பார் 1000' என்ற பெயரிலான சவுண்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இதை எளிதாக சுவரில் மாட்ட முடியும். இது 150 வாட் திறனை வெளிப்படுத்தக் கூடியது. 90 வாட் திறன் கொண்ட சப்-ஊபர்கள் 5 அங்குல அளவில் உள்ளன. இது 70 டெசிபல் அளவுக்கு ஒலியை வெளியிடக்கூடியது.

இதில் டால்பி அட்மோஸ் சவுண்ட் நுட்பம் உள்ளதால் இனிய இசையைக் கேட்டு மகிழலாம். புளூடூத் 5.3 இணைப்பு வசதி, எல்.இ.டி. திரை வசதி கொண்ட இதனை ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயல்படுத்தலாம்.

கருப்பு நிறத்தில் வந்துள்ள இந்த சவுண்ட் பாரின் விலை சுமார் ரூ.9,999.


Next Story