கவாஸகி இஸட் 900. ஆர்.எஸ்.


கவாஸகி இஸட் 900. ஆர்.எஸ்.
x

பிரீமியம் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் கவாஸகி நிறுவனம் மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இஸட் 900. ஆர்.எஸ். மாடலை மறு அறிமுகம் செய்துள்ளது.

இது முழுவதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாகும். இங்கு இறக்குமதி செய்து விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.16.47 லட்சம். இது 948 சி.சி. திறன் கொண்டது. 111 ஹெச்.பி. திறனை 8,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும்.

இதன் பெட்ரோல் டேங்க் 17 லிட்டர் கொள்ளளவு கொண்டது. முன்புறம் 300 மி.மீ. அளவிலும், பின்புறம் 250 மி.மீ. அளவிலும் டிஸ்க் பிரேக் உள்ளது. முன்புறம் டி.எப்.டி. திரை, எல்.இ.டி. முகப்பு விளக்கு, ஸ்லிப்பர் கிளட்ச் வசதி கொண்டது. சிவப்பு, நீலம் உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் வந்துள்ளது.

1 More update

Next Story