குஷாக் ஆனிக்ஸ் பிளஸ், ஸ்லாவியா ஆம்பிஷன் பிளஸ்


குஷாக் ஆனிக்ஸ் பிளஸ், ஸ்லாவியா ஆம்பிஷன் பிளஸ்
x

பாதுகாப்பான மற்றும் சொகுசு கார்களைத் தயாரிக்கும் ஸ்கோடா நிறுவனத் தயாரிப்புகளில் குஷாக் மற்றும் ஸ்லாவியா மாடல் கார்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை யாகும். இந்த மாடல்களில் மேம்பட்ட அம்சங்கள் கொண்ட கார்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குஷாக் மாடலில் ஆனிக்ஸ் பிளஸ் என்ற பெயரிலான பிரீமியம் மாடல் காரும், ஸ்லாவியா மாடலில் ஆம்பிஷன் பிளஸ் என்ற காரும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

குஷாக் ஆனிக்ஸ் மாடலில் ஜன்னல் பகுதிகளில் உள்ள குரோம் பூச்சு மேலும் அழகூட்டியுள்ளது. இது 1.0 டி.எஸ்.ஐ. என்ஜினுடன் ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் கியர் மாடலாக வந்துள்ளது. கேன்டி வெள்ளை, கார்பன் ஸ்டீல் நிறங்களில் கிடைக்கும்.

ஸ்லாவியா ஆம்பிஷன் மாடலில் முன்புற கிரில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1.0 டி.எஸ்.ஐ. என்ஜினுடன் ஆட்டோமேடிக் மாடல் 6 கியர்களைக் கொண்டது.

விற்பனையக விலை

ஆனிக்ஸ் பிளஸ் - சுமார் ரூ.11.59 லட்சம்

ஆம்பிஷன் - சுமார் ரூ.12.49 லட்சம்


Next Story