லம்போர்கினி ரிவுயெல்டோ
பந்தயக் கார்களைத் தயாரிக்கும் லம்போர்கினி நிறுவனம் புதிதாக ரிவுயெல்டோ என்ற பெயரிலான சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகம் செய்துள்ளது.
இந்நிறுவனம் முதல் முறையாக ஹைபிரிட் மாடலை தயாரித்துள்ளது. அதி விரைவாகச் செல்லும் பேட்டரி கார் இதுவாக இருக்கும். புதுமையான வடிவமைப்பு, அதிகபட்ச செயல்திறன், ஏரோடைனமிக் வடிவம் இதன் சிறப்பம்சமாகும். இதில் அதிகபட்ச செயல்திறனை வழங்குவதற்காக 3 மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரட்டை கிளட்ச் கொண்ட கியர் பாக்ஸ் உள்ளது. இது 12 சிலிண்டரைக் கொண்டது.
இதில் 4500 வாட் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை ஸ்டார்ட் செய்து 2.5 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கி.மீ. ஆகும். இதன் விலை சுமார் ரூ.10 கோடி.
Related Tags :
Next Story