மாருதி பிரெஸ்ஸா சி.என்.ஜி. அறிமுகம்


மாருதி பிரெஸ்ஸா சி.என்.ஜி. அறிமுகம்
x

மாருதி நிறுவனத் தயாரிப்புகளில் அதிகம் விற்பனை யாகும் பிரெஸ்ஸா மாடலில் தற்போது சி.என்.ஜி.யில் இயங்கும் காரை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது எரிபொருள் சிக்கனமானது என்றும், சோதனை ஓட்டத்தில் ஒரு கிலோ சி.என்.ஜி.க்கு 25.51 கி.மீ. தூரம் ஓடியதாகவும் தெரிவித்துள்ளது.

இதில் 1.5 லிட்டர் டியூயல் வி.வி.டி. என்ஜின் உள்ளது. இது 64.6 கிலோவாட் திறனை 5,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 4,200 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். 5 கியர்களைக் கொண்டதாக மூன்று வேரியன்ட்களில் (எல்.எக்ஸ்.ஐ., வி.எக்.ஐ. மற்றும் இஸட்.எக்ஸ்.ஐ.) வந்துள்ளது. இரட்டை கண்கவர் வண்ணங்களில் இது கிடைக்கும். உற்பத்தி நிறுவனத்திலேயே சி.என்.ஜி. டேங்க் தயாரிக்கப்பட்டு பொருத்தப்படுவது அதிகபட்ச பாதுகாப்பு தன்மையை உறுதி செய்கிறது. இது ஒருங்கிணைந்த வகையில் பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி. டேங்கு களைக் கொண்டது.

சி.என்.ஜி. தீர்ந்துபோனால் பெட்ரோலில் இயங்க பொத்தானை மாற்றினால் போதுமானது. புதிதாக மூன்று வேரியன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டதால் தற்போது பிரெஸ்ஸா மாடலில் மொத்தம் 14 வேரியன்ட்கள் உள்ளன. இவை அனைத்தும் மாருதி ஏரினா விற்பனையகங்களில் கிடைக்கும்.


Next Story