ஒகினோவா பேட்டரி ஸ்கூட்டர்


ஒகினோவா பேட்டரி ஸ்கூட்டர்
x

ஒகினோவா ஆட்டோடெக் நிறுவனம் இத்தாலியைச் சேர்ந்த டாசிடா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஒ.கி 90 என்ற பெயரிலான பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. எளிதில் பழுது நீக்கும் வகையில் இந்த மோட்டார் சைக்கிளின் பேட்டரி மற்றும் மோட்டார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வண்ணத் திரை கொண்ட ஸ்பீடோ மீட்டர், உள்ளீடாக நேவிகேஷன் வசதி, புளூடூத் இணைப்பு வசதி, ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகள் குறித்த அறிவுறுத்தல், நேரம் காட்டும் கடிகாரம், இசை குறித்த அறிவிப்பு, மொபைல் செயலி மூலமான இணைப்பு வசதி ஆகியவை இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.


Next Story