3 புதிய மாடல்களில் ஸ்கிராம்ப்ளர்


3 புதிய மாடல்களில் ஸ்கிராம்ப்ளர்
x

பிரீமியம் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் டுகாடி நிறுவனம் தனது ஸ்கிராம்ப்ளர் மாடலில் மூன்று புதிய மாடல் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்கிராம்ப்ளர் ஐ கான், ஸ்கிராம்ப்ளர் புல் திராட்டில், ஸ்கிராம்ப்ளர் நைட்ஷிப்ட் என்ற பெயர்களில் வந்துள்ள இது ஏர் கூல்டு இரட்டை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது.

டிரெலிஸ் பிரேம், அகலமான ஹாண்டில்பார் ஆகியன இதன் சிறப்பம்சமாகும். இதன் பெட்ரோல் டேங்க் வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ற வகையிலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மஞ்சள், கருப்பு, சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் மட்டும் இது வெளிவந்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.10.39 லட்சம் முதல் ஆரம்பமாகிறது.


Next Story