சிம்பிள் ஒன் பேட்டரி ஸ்கூட்டர்


சிம்பிள் ஒன் பேட்டரி ஸ்கூட்டர்
x

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கும் சிம்பிள் எனர்ஜி நிறுவனம், புதிதாக சிம்பிள் ஒன் என்ற பெயரிலான ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இது இளம் தலைமுறை தொழில்முனைவோர்களைக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். இந்த ஸ்கூட்டரில் 8.5 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது 72 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 236 கி.மீ. தூரம் வரை ஓடக் கூடியது. இந்தியாவில் இதுவரை அறிமுகமாகியுள்ள பேட்டரி ஸ்கூட்டரில் அதிகபட்ச தூரம் ஓடக் கூடியதாக இந்த ஸ்கூட்டர் திகழ்கிறது. இதில் 4.8 கிலோவாட் அவர் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்டரி பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய ஏ.ஐ.எஸ். சான்று பெற்றுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.45 லட்சம்.


Next Story