இரண்டாம் தலைமுறை பி.எம்.டபிள்யூ. எம் 2 அறிமுகம்


இரண்டாம் தலைமுறை பி.எம்.டபிள்யூ. எம் 2 அறிமுகம்
x

பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஒரு புதிய காரை அறிமுகம் செய்துள்ளது.

பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது எம் 2 மாடலில் இரண்டாம் தலைமுறை காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.98 லட்சம். இரண்டு கதவுகள் கொண்ட கூபே மாடலாக ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உடையதாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. வாடிக்கையாளர் விரும்பினால் மேனுவல் கியர் பாக்ஸ் மாடலைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த கார் 3 லிட்டர் 6 சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. இது 460 ஹெச்.பி. திறன் மற்றும் 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். 8 ஆட்டோமேடிக் கியர்களைக் கொண்டது. இதை ஸ்டார்ட் செய்த 4.1 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ. பேட்டரியில் இயங்கும் இருக்கைகள் உள்ளதால் இதைத் தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இதில் அடாப்டிவ் எல்.இ.டி. முகப்பு விளக்கு உள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் வசதி, ஹார்மன் கார்டோன் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.

இந்த காரில் 19 அங்குல அலாய் சக்கரம் பயன்படுத்தப் பட்டுள்ளது. வெள்ளை, கிரே, சிவப்பு, கருப்பு, நீலம் உள்ளிட்ட 5 கண்கவர் நிறங்களில் இந்த கார் கிடைக்கும். ரூ.1 லட்சம் கூடுதலாக செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பைபரால் ஆன மேற்கூரை கொண்ட காரை வாங்க முடியும். அதேபோல கார்பன் பைபரால் ஆன பக்கெட் இருக்கை, கருப்பு நிற அலாய் சக்கரம் உடைய காரை தேர்வு செய்யலாம். இதனுள் 14.9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போ டெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 12.3 அங்குலம் கொண்ட இன்ஸ்ட்ரூ மென்ட் கிளஸ்டர் உள்ளது. கூபே மாடலைத் தேர்வு செய்வோர் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் கொண்டதாக இந்த கார் வந்துள்ளது.


Next Story