விவோ வி 29 இ ஸ்மார்ட்போன் அறிமுகம்


விவோ வி 29 இ ஸ்மார்ட்போன் அறிமுகம்
x

ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் விவோ நிறுவனம் புதிதாக வி 29 இ என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் இரண்டு சிம் கார்டு போடும் வசதி, 6.78 அங்குல அமோலெட் திரை உள்ளது.

ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 695 8 என்.எம். பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 44 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் மாடலின் விலை சுமார் ரூ.26,999.

8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.28,999.


Next Story