மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் போக்ஸ்வேகன் டிகுயான்


மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் போக்ஸ்வேகன் டிகுயான்
x

அழகிய கிரே வண்ண உள்பகுதியுடன் மேம்படுத்தப்பட்ட பல அம்சங்களைக் கொண்டதாக போக்ஸ்வேகன் டிகுயான் அறிமுகமாகியுள்ளது. பார்க்கிங் செய்வதில் உள்ள சிரமத்தைத் தவிர்க்கும் பொருட்டு இதில் பார்க் அசிஸ்ட் வசதி உள்ளது. மிகவும் நெரிசல் மிகுந்த இடத்திலும் வாகனத்தை பத்திரமாக கீறல் விழாமல் பார்க்கிங் செய்ய உதவுகிறது. வயர் லெஸ் மொபைல் சார்ஜிங் வசதியும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் 2 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் 190 பி.எஸ். திறனை வெளிப்படுத்தும். 1984 சி.சி. திறன் கொண்ட இது 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். 7 கியர்களைக் கொண்டது. 20 செ.மீ. அளவிலான இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் ஆகியவற்றுடனும் இதை இணைத்து செயல்படுத்த முடியும். போக்ஸ்வேகன் நிறுவனத் தின் கனெக்ட் பிளஸ் செயலியானது காரின் மேம்பட்ட செயல்திறனை மேலும் அதிகரிக்க உதவுகிறது.

அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் நினைவூட்டலை யும் சேர்த்துள்ளது. 6 ஏர் பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கண்ட்ரோல் மற்றும் மூன்று புள்ளி சீட் பெல்ட்கள் மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் சரிசெய்யக்கூடிய ஹெட் கண்ட்ரோல்கள் ஆகியவை பிற பாதுகாப்பு அம்சங் களாகும்.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.34,69,900.


Next Story