டிராக்ஷன் கண்ட்ரோல் வசதியுடன் யமஹா ஏரோக்ஸ் 155


டிராக்ஷன் கண்ட்ரோல் வசதியுடன் யமஹா ஏரோக்ஸ் 155
x
தினத்தந்தி 20 April 2023 11:30 AM GMT (Updated: 20 April 2023 11:30 AM GMT)

இளைஞர்களின் அபிமான பிராண்டான யமஹா தயாரிப்புகளில் ஏரோக்ஸ் மாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இம்மாடலில் தற்போது மேம்படுத்தப்பட்ட அம்சமாக டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (டி.சி.எஸ்.) வசதி பொருத்தப் பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் யூரோ 20 எரிபொருள் சிக்கன வசதி உள்ளது. அத்துடன் வாகன செயல்பாடுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் ஓ.பி.டி. வசதியும் இதில் உள்ளது. 150 சி.சி. என்ஜின் வி.வி.ஏ. எனப்படும் வேரியபிள் வால்வு ஆக்டிவேஷன் (வி.வி.ஏ.) தொழில்நுட்பம் கொண்ட தாக வந்துள்ளது. லிக்விட் கூல்டு 4 ஸ்டிரோக் என்ஜின், நான்கு வால்வுகளைக் கொண்டது. இதில் சிறப்பான எஸ்.ஓ.ஹெச்.சி. என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது 15 பி.எஸ். திறனை 8 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப் படுத்தும். இதேபோல 13.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். இது யமஹா தயாரிப்புகளுக்கே உரித்தான மெட்டாலிக் கருப்பு நிறத்தில் வந்துள்ளது. ஒய் கனெக்ட் இணைப்பு வசதி கொண்ட மாடலையும் வாடிக்கையாளர் தேர்வு செய்து கொள்ளலாம். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,42,800.


Next Story