யமஹா ஒய்.இஸட்.எப். ஆர் 15 வி 4 டார்க்நைட் எடிஷன்


யமஹா ஒய்.இஸட்.எப். ஆர் 15 வி 4 டார்க்நைட் எடிஷன்
x

யமஹா நிறுவனம் தனது ஒய்.இஸட்.எப். ஆர் 15 வி 4 மாடலில் டார்க்நைட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. சிவப்பு (விலை சுமார் ரூ.1.81 லட்சம்), நீலம் (சுமார் ரூ.1.82 லட்சம்) மற்றும் வெள்ளை நிறத்தில் (சுமார் ரூ.1.86 லட்சம்) கிடைக்கும். இது 155 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டது.

18.4 பி.ஹெச்.பி. திறனையும், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் 6 கியர்களைக் கொண்டதாக இது அறிமுகமாகி யுள்ளது. முன் சக்கரத்திற்கு 282 மி.மீ. அளவிலான டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்திற்கு 220 மி.மீ. அளவிலான டிஸ்க் பிரேக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.) கொண்டது.

முன்புறம் யு.எஸ்.டி. போர்க்கும், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பரும் உடையது. 1,990 மி.மீ. நீளமும், 725 மி.மீ அகலமும், 1,135 மி.மீ. உயரமும் உடையது. எல்.இ.டி. முகப்பு விளக்கு, சைடு ஸ்டாண்டு போடப்பட்டிருந்தால் என்ஜின் ஆப் ஆகும் வசதி, எல்.சி.டி. டிஜிட்டல் மீட்டர், டிராக்ஷன் கண்ட்ரோல் வசதி, செயலி இணைப்பு உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.


Next Story