நற்கருணை வீரர்களுக்கு மேலும் ரூ.5,000 வழங்கப்படும் -அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு


நற்கருணை வீரர்களுக்கு மேலும் ரூ.5,000 வழங்கப்படும்  -அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 March 2023 6:53 PM IST (Updated: 29 March 2023 6:54 PM IST)
t-max-icont-min-icon

சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கனவே மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.5000 தொகையுடன் மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக ரூ.5000 வழங்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, 6வது பயணம் முதல் 50% கட்டணச் சலுகை அளிக்கப்படும்.

மேலும் ஆதார் அட்டையை பயன்படுத்தி ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வராமலேயே ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு தொடர்பான 42 சேவைகளை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


Next Story