6 பேர் விடுதலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்


6 பேர் விடுதலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்
தினத்தந்தி 17 Nov 2022 8:34 PM IST (Updated: 17 Nov 2022 8:35 PM IST)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையான இலங்கையை சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் கடந்த திருச்சி சிறப்பு முகாமில் தனித்தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறை தண்டனை பெற்ற 6 பேரையும் விடுதலை செய்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இது சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Next Story