ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு ; டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நில அதிர்வு


ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு ; டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில்  நில அதிர்வு
x
தினத்தந்தி 13 Jun 2023 2:13 PM IST (Updated: 13 Jun 2023 2:33 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பிற்பகல் 1.33 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதையடுத்து பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு அடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் கந்தோஷ் பாலிஷா என்ற இடத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா பகுதிகளையும் அதிரவைத்தது. இது ரிக்டரில் 5.4ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வட மாநிலங்கள் குலுங்கின. அரியானா, பஞ்சாப், டெல்லி, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. அதன் எதிரொலியாக டெல்லி மற்றும் வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story