ஐதராபாத் அருகே ஓடும் ரெயிலில் திடீர் தீ விபத்து


ஐதராபாத் அருகே ஓடும் ரெயிலில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 7 July 2023 12:38 PM IST (Updated: 7 July 2023 12:41 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானா ஐதராபத் அருகே சென்று கொண்டிருந்த பலக்னுமா விரைவு ரெயில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஹவுராவில் இருந்து செகந்திரபாத் வந்து கொண்டிருந்த விரைவு ரெயிலில் மூன்று பெட்டிகளில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொம்மைபள்ளி, பகிடிபள்ளி இடையே வந்தபோது விரைவு ரெயிலின் பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உரிய நேரத்தில் தீ விபத்து கண்டறியப்பட்டு பயணிகள் கிழே இறங்கியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story