பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் வருமானவரித்துறை சோதனை


பொதுப்பணித்துறை  ஒப்பந்ததாரர்  செய்யாதுரை வீட்டில்  வருமானவரித்துறை சோதனை
தினத்தந்தி 6 July 2022 10:44 AM GMT (Updated: 6 July 2022 10:46 AM GMT)

விருதுநகர் அருகே அருப்புக்கோட்டையில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரின் வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். ஒப்பந்ததாரர் மற்றும் அவரது மகன்களுக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். செய்யாதுரையின் எஸ்.பி.கே கட்டுமான நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பொதுப்பணித்துறை ஒப்பந்ததரார் செய்யாதுரை வீட்டில் கடந்த 2018-ம் ஆண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. வடவள்ளியில் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டிலும் ஏற்கனவே வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது.


Next Story