ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18ம் தேதி-இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்


ஜனாதிபதி  தேர்தல் ஜூலை 18ம் தேதி-இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
x
தினத்தந்தி 9 Jun 2022 9:57 AM GMT (Updated: 9 Jun 2022 10:09 AM GMT)

ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்து உள்ளார்.


புதுடெல்லி

இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் புதுடெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் முக்கிய அமசங்கள் வருமாறு:-

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

ராஜ்யசபாவின் செயலாளர் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

ஜனாதிபதி தேர்தலில் பதிவாக உள்ள மொத்த வாக்குகள் 10,86,431. 4,809 பேர் வாக்காளர்களாக உள்ளனர். (776 எம்.பி.க்கள் மற்றும் 4,033 எம்.எல்.ஏ.க்கள்) 776 எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 5,43,700; 4,033 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு 5,43,23.

ஜனாதிபதி ர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும்

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜுன் 25-ல் தொடங்கும்.

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் ஜுன் 29 ஆகும்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜுன் 30-ல் நடைபெறும்.

மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி ஜுலை 2.

ஜுலை 21-ல் வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர், இந்திய குடிமகனாகவும், 35 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும் என்பது விதி.

மக்கள்தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மதிப்பு வேறுபடும்.

ஒரு எம்.பி வாக்கு மதிப்பு 700 ஆக நிர்ணயம்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் ஒரு தமிழக எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 176 ஆகும்.

நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும், நாட்டின் அனைத்து சட்டமன்றங்களிலும் ஜனாதொபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்


Next Story