மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-யின் இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்
மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குனராக பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குனராக பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக டிஜிபியாக இருந்த பிரவீன் சூட் , இரண்டு ஆண்டுகள் சிபிஐ இயக்குனர் பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1986 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான பிரவீன் சூட், தற்போது சிபிஐ இயக்குனராக இருக்கும் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலின் பதவிக்காலம் நிறைவு பெற்றதும் சிபிஐ இயக்குனர் பதவியை ஏற்பார்.
பிரதமர் மோடி, தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோர் அடங்கிய குழு சிபிஐ இயக்குனரை தேர்வு செய்கிறது. சிபிஐ இயக்குனரின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். எனினும் 5 ஆண்டுகள் வரை பதவிக்காலத்தை நீட்டிக்க முடியும்.
Related Tags :
Next Story