சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம்- தமிழக அரசு அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 போலீஸ் அதிகாரிகளுக்கு 2022-ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு, அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்-அமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.
இதில் கீழ்கண்ட போலீசாருக்கு காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.
- பிரேம் ஆனந்த் சின்கா, சென்னை பெருநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் (சட்டம் - ஒழுங்கு தெற்கு)
- க.அம்பேத்கார், போலீஸ் இன்ஸ்பெக்டர் (கடலூர் குற்றப்புலனாய்வுத் துறை தனிப்பிரிவு)
- சு.சிவராமன், சென்னை அடையாறு போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
- வை.பழனியாண்டி, மதுரை மாநகரம் மதிச்சியம் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
- மா.குமார், செம்மஞ்சேரி போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
இதேபோன்று, புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக முதல்-அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதில் கீழ்கண்ட போலீசாருக்கு சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளது,
- கோ.ஸ்டாலின், மதுரை மாநகர துணை போலீஸ் கமிஷனர்
- ச.கிருஷ்ணன், சேலம் மாநகர டி.எஸ்.பி. (ஒருங்கிணைந்த குற்ற அலகு குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை)
- மா.பிருந்தா, விழுப்புரம் மாவட்ட ரோஷனை போலீஸ் இன்ஸ்பெக்டர்
- அ.பிரபா, நாமக்கல் மாவட்டம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்
- வீ.சீனிவாசன், சென்னை பெருநகர கோடம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர்
- மா.சுமதி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்
- சி.நாகலெட்சுமி, நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப் பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர்
- வெ.துளசிதாஸ், சென்னை பெருநகர பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
- ச.ல.பார்த்தசாரதி, சென்னை குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (ஒருங்கிணைந்த குற்ற அலகு-1) போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
- கா.இளையராஜா, சென்னை அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் (1 பவுன்) எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த விருதுகள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.