பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க தமிழக அரசு திட்டம்


பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க தமிழக அரசு திட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2024 5:10 PM IST (Updated: 1 Jan 2024 5:12 PM IST)
t-max-icont-min-icon

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இந்த பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1,000 ரூபாய் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1,000 ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாள் வெளியாகும் என கூறப்படுகிறது.


Next Story