சர்வதேச கால்பந்து தரநிலையில் 100-வது இடத்திற்கு முன்னேறிய இந்திய கால்பந்து அணி


சர்வதேச கால்பந்து தரநிலையில் 100-வது இடத்திற்கு முன்னேறிய இந்திய கால்பந்து அணி
x
தினத்தந்தி 29 Jun 2023 11:03 AM GMT (Updated: 29 Jun 2023 11:11 AM GMT)

எப்ஐஎப்ஏ சமீபத்திய உலக தரவரிசையில் இந்திய ஆண்கள் கால்பந்து அணி 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

புதுடெல்லி,

சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 100-வது இடத்திற்கு முன்னேறியது. சமீபத்தில் நடைபெற்ற லெபனான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தரநிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்று வரும் தெற்காசிய கோப்பை போட்டியிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை ஆடி வருகிறது. வரலாற்றில் இரண்டாவது முறையாக இந்திய அணி 100 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது.


Next Story