தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என தகவல்


தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என தகவல்
தினத்தந்தி 9 Nov 2022 9:18 AM IST (Updated: 9 Nov 2022 9:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னை,

தென்மேற்கு வங்க்கடல் மற்றும் அதனையொட்டி பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகரும் என்றும் வரும் 11, 12,13-ம் தேதி ஆகிய நாட்களில் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


Next Story