மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் தொடர் முழுவதும் சஸ்பெண்டு

மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் தொடர் முழுவதும் சஸ்பெண்டு
x
தினத்தந்தி 8 Aug 2023 11:31 AM IST (Updated: 8 Aug 2023 12:05 PM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மக்களவையில் அவை நடவடிக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

டெல்லி சேவைகள் மசோதா மீதான விவாதத்தின்போது மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தங்கர் விளம்பரம் பெறுவதற்காக டெரிக் ஓ பிரையன் சபையில் நாடகமாடுவதாக கூறினார்

1 More update

Next Story