கொரோனா அதிகரிப்பு - மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க மத்திய மந்திரி மண்டவியா அறிவுறுத்தல்
கொரோனா அதிகரிப்பு குறித்து விழுப்புடன் இருக்க மாநில அரசுகளுக்கு மத்திய மந்திரி மண்டவியா அறிவுறுத்தி உள்ளார்.
மாநில மருத்துவத்துறை அமைச்சர்களுடன் காணொலியில் மத்திய சுகாதரத்துறை ஆலோசனை நடத்தினார். அப்போது,
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏப்ரல் 10,11 தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த வேண்டும். ஏப்ரல் 8,9 மாவட்ட நிர்வாகங்கள், சுகாதார அதிகாரிகளுடன் தயார் நிலை பற்றி ஆலோசிக்க வேண்டும். சுகாதார தயார் நிலை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவும் மத்திய மந்திரி அறிவுரை வழங்கி உள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 6,050 ஆகவும் உயிரிழப்பு 13 ஆகவும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story