சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு


சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
x
Daily Thanthi 2023-06-14 05:16:50.0
t-max-icont-min-icon

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்கள், அவரின் சகோதரர் வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

அதன் அடிப்படையில் சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை, கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது சுமார் 18 மணிநேரம் நீடித்து வந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

1 More update

Next Story