பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் -... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
Daily Thanthi 2025-01-02 14:53:36.0
t-max-icont-min-icon

பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

இந்தியாவிலேயே பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். தேசிய குற்ற ஆவண காப்பகம் இறுதியாக வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி குற்றங்கள் தமிழ்நாட்டில் மிக மிக குறைவாகவே உள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் லட்சத்துக்கு 65 என்றால் தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் உள்ளது. பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவிலும், தமிழ்நாட்டில் 0.7 என்ற அளவிலும் உள்ளது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்

1 More update

Next Story