கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை பெற்ற தமிழக... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
Daily Thanthi 2025-01-02 15:28:17.0
t-max-icont-min-icon

கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை பெற்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து

கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை பெற்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,

தமிழ்நாட்டு விளையாட்டு துறையின் வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்தி பிடித்த நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கேல் ரத்னா விருது பெற்ற குகேஷ், அர்ஜுனா விருது பெற்ற துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு என் வாழ்த்துகள். வெற்றிகள் தொடரட்டும்!. தமிழ்நாட்டில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story