அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஹாரி எஸ். ட்ரூமேன் என்ற... ... 22-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-22 10:01:41.0
t-max-icont-min-icon

அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஹாரி எஸ். ட்ரூமேன் என்ற விமானந்தாங்கி கப்பலில் இருந்து, செங்கடலின் மேலே பறந்து சென்ற எப்/ஏ-18 ரக போர் விமானத்தின் மீது, இந்த கப்பல் குழுவுடன் இணைந்த மற்றொரு கப்பலான யு.எஸ்.எஸ். கெட்டிஸ்பர்க் கப்பலில் இருந்தவர்கள் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் சூழலில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் வர்த்தக கப்பல்களை தாக்கி வருகின்றனர். இதனை எதிர்கொள்ளும் வகையில், அந்த பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்க போர் விமானம் பறந்தபோது அதனை தவறுதலாக, அமெரிக்க கப்பலில் இருந்தவர்கள் சுட்டுள்ளனர். எனினும், நட்பு ரீதியாக சுடப்பட்ட விவகாரம் என இதனை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

1 More update

Next Story