அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 3வது சுற்று நிறைவு


அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 3வது சுற்று நிறைவு
x
Daily Thanthi 2023-01-15 05:28:09.0

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 3வது சுற்று நிறைவு பெற்றுள்ளது.

அவனியாபுரம்,

பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள்.

ஆயிரம் காளைகள் வாடிவாசலில் சீறி வர இருக்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் 3ம் சுற்று நிறைவு பெற்றுள்ளது. 3ம் சுற்றில் இதுவரை 192 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. 3ம் சுற்றின் முடிவில் அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி 15 காளைகளை அடக்கி முதல் இடத்தில் உள்ளார். மேலும், அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் மற்றும் அருண் குமார் ஆகியோர் தலா 6 காளைகளை அடக்கி 2ம் இடத்தில் உள்ளனர்.


Next Story