
திமுக எதிர்ப்பு அலையை பயன்படுத்தி தேர்தல் பணியை வேகப்படுத்துங்கள்: எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
தமிழகம் முழுவதும் வலம் வரும் நிலையில், மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதால் எடப்பாடி பழனிசாமி உற்சாகத்தில் இருக்கிறார். அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், மாநில நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், எம்.சி.சம்பத், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.






